Friday, 19 October 2007

என்ன கொடுனம Sir இது!!

வடிவேலு படத்தில் ஷ்ரேயா

சிவாஜியில் ரஜினியுடன் பழகிய ஷ்ரேயா, அதே நேரத்தில் அவர் மருமகனுடனும் ஒரு படத்தில் நடித்தார். இப்போது, வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அவர் ஒரு குத்துப் பாட்டுக்கு வடிவேலுவுடன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார். பணம் பத்தும் செய்யும்!

தென்காசிக்கு அருகில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் ஷ்ரேயாவும் வடிவேலுவும் இணைந்து, அக்டோ பர் இரண்டாம் வாரத்தில் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். ஷோபி, இதற்கு நடனம் அமைத்திருக்கிறார். ஷ்ரேயாவின் கால்ஷீட்டுக்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், மிகப் பெரிய தொகை ஒன்றை அளித்திருக்கிறார். அப்புறம்தான் இந்தப் பூம்பாவாய் இறங்கி வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வடிவேலு, இந்திரன், யமன், சாதாரண மனிதன் என 3 வேடங்களில் நடித்துள்ளார். தம்பி ராமையா இயக்கத்தில், தோட்டா தரணி கலை அமைக்க, சபேஷ் முரளி இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, யாமினி ஷர்மா.

No comments: