அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும் வகையை மாற்றியெழுதும் என்று நம்புகிறேன்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் முழுக்க முழுக்க தொடுகையை (Touchscreen) உணர்ந்து செயற்படக்கூடியதாகும். ஐமேட் மற்றும் இன்ன பிற பிடிஏ(PDA)க்களில் இருப்பது போன்ற பிரத்தியேக தொடுபேனா இந்தச் செல்பேசிக்கு தேவையில்லை. வெறும் கை கொண்டே தொட்டு இயக்கலாம். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் வெறும் கைகொண்டு மட்டுமே இயக்க முடியும். தொடுதிரையானது வேறொரு ஆப்டிகல் கண்ணாடித்திரையால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தொடுதிரை எளிதில் பாதிப்படைந்துவிடும் என்ற பயமும் இல்லை.
இது ஐபாட்(iPod), செல்பேசி(Cellphone) மற்றும் கைக்கணினி (PDA) இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு ஒருங்கு சாதனம். இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று தனித்தனி சாதனங்களாகப் பார்த்தால்கூட இவற்றில் அற்புதமான முன்னேற்றங்கள் புதிய ஐஃபோனில் இருக்கின்றன
ஐபோட்(iPod) போலவே ஐஃபோனிலும் அசைபடங்கள், திரைப்படங்கள் காணும் வசதி மேம்பட்ட நிலையில் உள்ளது. தந்தியில்லா இணைய (Wireless Internet - WiFi) வசதியும் உள்ளது. யூட்யூப்(YouTube) நிரலி இந்தச் செல்பேசியில் உள்ளதால் யூட்யூப் தளத்தில் இருந்து அசைபடங்களை எளிதாக இந்தப் பேசியில் காண முடியும். மின்னஞ்சல் வசதியும் சிறப்பாக உள்ளது.
Friday, 26 October 2007
ஆப்பிள் ஐஃபோன் ( Apple iPhone)
Posted by tksora at 8:54 am
Labels: அறிதல் நன்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment