Monday, 29 October 2007

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌தீபாவ‌ளி‌க்கு ஒ‌ப்புத‌ல்...

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான ஒப்புதலை அந்நாட்டு நாடாளும‌ன்ற‌ம் அளித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் ஆவர். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியை கொ‌ண்டாட அனும‌‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நீ‌‌ண்ட நா‌ட்களாக கோ‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்ப‌ட்டது. இந்நிலையில்,வரலாற்று மற்றும் மத அடிப்படையிலான முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட, அந்நாட்டு நாடாளும‌ன்ற‌ம் ஒப்புதல் அளி‌க்க‌ப்‌பட்டு‌ள்ளது. இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் இந்த ஒப்புதல் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும்.


(மூலம் - வெப்துனியா)

No comments: