
ஈரோட்டைச் சேர்ந்த எஸ்கேஎம் எக் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் முழுவதும் இயற்கை உணவுகளைத் தீவனமாகக் கொண்ட கோழிகள் மூலம் பெறப்படும் சைவ முட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன மேலாளர் ஹரிஹரன் கூறும்போது 8 வாரத்துக்கு உட்பட்ட கோழிக் குஞ்சுகளை தனியாக பண்ணையில் பராமரிக்கிறோம்.
அவற்றின் குஞ்சு பொரிக்கும் காலமான 72வது வாரம் வரை சோயாபீன்ஸ் உட்பட இயற்கை உணவுகளால் தயாரிக்கப்பட்ட பவுடர் தீவனமாக அளிக்கப்படுகிறது.
அவற்றைத் தின்று வளரும் கோழிகள் இடும் முட்டை 100 சதவீத சைவமாகவே கருதப்படும்.ஏனெனில் வைக்கோல், புல், பிண்ணாக்கு உள்பட இயற்கை தீவனத்தைச் சாப்பிடும் பசுக்கள் தரும் பாலை சைவமாகக் கருதுகிறோம்.
எனவே இயற்கை தீவனம் தின்று வளரும் கோழிகளின் முட்டையையும் அப்படியேக் கருதப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
Monday, 24 December 2007
சைவ முட்டை
Posted by tksora at 9:07 am 0 comments
Labels: அறிதல் நன்று
Tuesday, 11 December 2007
சோஷியல் நெட்வொர்க்கிங் மூலம் ஐடி பணியாளர்கள் தேர்வு
ஆர்குட்.காம்(orkut.com), மை ஸ்பேஸ்(myspace.com), ஃபேஸ்புக்(facebook.com) உள்ளிட்ட சில நட்புறவு சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களில் நண்பர்களுக்கு நம்மை பற்றிய விவரங்களை நாம் அளிக்கும்போது நாம் உண்மையில் ஒரு பயோ-டேட்டாவையே அங்கு தருகிறோம். இதன் மூலம் பலருக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் உள்ளது.
ஆம்! முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஹெச்.ஆர். துறையைச் சேர்ந்தவர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், தனி நபர் மற்றும் குழு வலைப்பதிவுகளை தேடிச் சென்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை கண்டுபிடித்துக் கொள்கின்றனர்.
முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனம் தனது பணியாளர்கள் தேர்வில் சுமார் 10 சதவீதம் வரை வலைப்பதிவுகள் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களிலிருந்தே தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லின்கெடின் என்ற வர்த்தக நோக்கமுடைய சோஷியல் இணையதளம் மூலம் தங்களது பணியாளர்கள் பலரை ஹெச்.சி.எல். நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
தனி நபர் வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களைப் பார்த்து அதிலிருந்து தேவையான நபர்களை தேர்வு செய்வதற்கென்றே தனியான தேர்வுக் குழுவை நியமித்திருப்பதாக ஹெச்.சி.எல் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
அதாவது தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான ஜூனியர் மட்ட பணியாளர்கள் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்களையும் இதுபோன்ற சோஷியல் நெட்வொர்க் மற்றும் வலைப்பதிவுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது பல நிறுவனங்கள். அதாவது குழு மேலாளர்கள், பொது மேலாளர்கள் என்று மிகப்பெரிய பதவிக்கான நபர்களும் வலைப்பதிவுகள் மூலம் கிடைக்கின்றனர் என்று ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா கன்சன்ல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களை தங்களது மனித வள ஆதாரமாக பயன்படுத்தி வருகிறது.
மொத்தத்தில் இதுபோன்ற தேர்வு முறைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. ஏனெனில் அனைத்து தரப்பு தொழில் வல்லுனர்களும் சோஷியல் நெட்வொர்க்கிங் வலைத்தள நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இது போன்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மீதான நம்பகத்தன்மையை சில நிறுவனங்கள் கேள்விக்குட்படுத்துகின்றன. மேலும் இது போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் மற்றும் தனி நபர் வலைப்பதிவுகள் பலவற்றை நம்ப முடிவதில்லை என்று சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் கருதுகிறது.
ஆனால் இது போன்ற தேர்வு முறைகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 15-18 சதவீதம் வரை தற்போது வளர்ச்சியடைந்துள்ளது என்று மாஃபாய் கன்சல்டன்சி நிறுவனம் தெரிவிக்கிறது.
எனவே சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளத்திலேயே இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று கவலைப்பட வேண்டியத் தேவையில்லை. அது அவர்களது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கை என்பதை நினைவில் கொள்வது நல்லது.
Posted by tksora at 9:32 am 0 comments
Labels: அறிதல் நன்று
Monday, 10 December 2007
மின்னஞ்சல் (E-Mail)

மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அநுப்பும் போது யாரிடமிருந்து யாரிற்கு அநுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப் படுகின்றது. ஆரம்பத்தில் ASCII முறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள் பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான் மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்கின்றது.
மின் அஞ்சல் பிறந்து முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. (எனக்குக் கூட கிட்டத்தட்ட அதே வயதுதான். ம். என்ன பிரயோசனம்?) மூன்று நான்கு வருடமாகத்தான் நாம் இன்று பயன்படுத்தும் மின்அஞ்சல் வசதிகள் பரவலாக கிடைக்கின்றன என்றாலும், ஒரு தொழில்நுட்பம் என்கிற வகையில் அது பிறந்தது 1971-இல்.
ரே டாம்லின்சன் (Ray Tomlinson) என்கிற அமெரிக்க விஞ்ஞானிதான் மின்அஞ்சலை அப்போது உருவாக்கினார். பி.பி.என். டெக்னாலஜீஸ் என்கிற நிறுவனத்தில் முதன்மை பொறியாளராக உள்ளஅவர் இப்போது மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் - மின்அஞ்சலின் தந்தை என்கிற ஸ்டார் ஜொலிப்புடன்.
Posted by tksora at 11:41 am 0 comments
Labels: அறிதல் நன்று
Thursday, 6 December 2007
இணையத்தின் வாயிலாக பஸ் டிக்கட்!

இந்தியாவில் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டை வழங்கும் ரெட்பஸ் டாட் இன் (www.redbus.in) என்ற நிறுவனம், இணையத்தின் மூலமாக பயணச் சீட்டு வழங்கும் தனது சேவையை சென்னையிலும் துவக்கி உள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக தலைமை நிர்வாகி மயான்க் பிடாவட்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இணையத்தின் வாயிலாகவும், மற்ற முறையிலும் அதிகளவு பேருந்து பயணச் சீட்டுகள் விற்பனையாகின்றன. இதனால் தான் சென்னையிலும் நாங்கள் இணையம் மூலம் பயணம் வழங்கும் சேவையை துவக்கி உள்ளோம்.
இந்தியாவில் இணைய தளம் வாயிலாக பேருந்து பயணச் சீட்டு வழங்கும் நிறுவனங்களில் www.redbus.in என்ற இணைய தளம் முன்னணி நிறுவனமாக இருக்கின்றது. நாங்கள் 14 மாநிலங்களில் பேருந்து பயணச் சீட்டை இணையம் மூலம் வழங்கி வருகின்றோம். இதற்காக ஆறு நகரங்களில் அலுவலகத்தை வைத்துள்ளோம். எங்கள் இணைய தளத்தின் வாயிலாக பயணம் செய்யும் பேருந்து, குளிர் சாதன வசதி உள்ளதா அல்லது எந்த வகை பேருந்து, பயணச் இருக்கை, பயணச் சீட்டை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் வசதிக்கு ஏற்ற படி பெற்றுக் கொள்வது, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ரொக்கமாக பணம் செலுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளன.
சமீப காலத்தில் தான் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டுகள் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் எவ்வித அலைச்சலும் இல்லாமல், நமக்கு தேவையான பேருந்து, இருக்கை, வசதியான நேரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. எங்கள் இணைய தளத்தின் சேவையில் அதிகளவு பேருந்து இயக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
நாங்கள் கூடிய விரைவில் செல் போன் மூலமாகவும் பேருந்து பயணச் சீட்டை பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
Posted by tksora at 8:44 am 0 comments
Labels: அறிதல் நன்று
Tuesday, 4 December 2007
நமீதா பாடலுக்காக தனி சென்ஸார்

சென்ஸார் போர்டில் ஒரு படத்தை போட்டுக்காட்டி, சென்ஸார் சான்றிதழ் பெறுவது வழக்கம். ஆனால், 'பில்லா' படத்தில் நமீதா கவர்ச்சி ஆட்டம் போடும் ஒரு பாடலை மட்டும் தனியாக போட்டுக்காட்டி சென்ஸார் வாங்கியிருக்கிறார்களாம்.
இந்த பாடலில் நமீதா வரலாறு காணாத அளவுக்கு மிக தாராளமாக கவர்ச்சி காட்டியிருக்கிறாராம். ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு சென்ஸாரில் பிரச்சனையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சிறப்பு சென்ஸார் நடந்திருக்கிறது.
இந்த காட்சியை பார்த்து கலங்கிபோன உறுப்பினர்கள், 8 இடங்களில் கத்தரி போட்டுவிட்டார்களாம். ஆனாலும் ரசிகர்களுக்கு வஞ்சனை இல்லாமல் கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.
Posted by tksora at 8:44 am 0 comments
Labels: சினிமா